வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி பேரணி நடைபெற்றது.
தமிழக முழுவதும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,இதனை முன்னெடுத்து செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பணிகளில், தன்னார்வலர்களும், பல்வேறு கட்சி பிரமுகர்களும் பங்கேற்று வேட்பாளர் பட்டியலில் பெயரை இணைப்பதற்கு பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கோவை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி பேரணி நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும்,மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் கிரியப்பனவர் கொடி அசைத்து துவங்கி வைத்தார். தாமஸ் பார்க் ரவுண்டானா பகுதியில் தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சி பேரணி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பேரணியில், பயிற்சி ஆட்சியர் பிரசாத், மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, வருவாய் கோட்டாட்சியர் மாருதி பிரியா உள்ளிட்ட பல அலுவலர்கள் பங்கேற்றனர்.






