ராமநாதபுரம் மே 13ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார்.முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய வீட்டு ஒன்றை கட்டியுள்ளார். புதிய வீட்டை முரளி ஜெகன் பெரியப்பா ராமச்சந்திரன் அபகரிக்க முயற்சிப்பதாக முரளி ஜெகனின் தாய் மற்றும் அவரது மனைவிக்கு தெரிய வந்தையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன் இருவரும் கடலாடி ஊரக வளர்ச்சி அலுவலர் நேரில் பார்க்க சென்றுள்ளனர்.இதனை அறிந்த முரளி ஜெகன் பெரியப்பா ராமசந்திரன் மகன் பார்த்திபன் மற்றும் ராமசந்திரன் மருமகன் தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் முரளி ஜெகனின் தாய் மற்றும் மனைவியை ஆகிய இருவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.மேலும் கடந்த 7ந் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த முரளி ஜெகன் தாய் மற்றும் அவரது மனைவி உமா தேவி ஆகிய இருவரையும் ராமசாந்திரன் தூண்டுதலின் பெயரில் ஆறு பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் காயமடைந்த முரளி ஜெகன் தாய் மற்றும் மனைவி இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக முரளி ஜெகனின் மனைவி உமாதேவி ஆறு பேர் மீது புகாரின் அளித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் ஆறு பேருக்கு பதிலாக நான்கு பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், எதிர் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் முரளி ஜெகன் தாய் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும், தங்கள் மீது உள்ள வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என முரளி ஜெகனின் மனைவி உமா தேவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.இந்நிலையில் முரளி ஜெகன் கடந்த 7ந் தேதி அவரது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி மற்றும் தாய் ஆகிய இருவரையும் ஆறு பேர் கொண்ட கும்பல் அடித்து காயப்படுத்தியதையடுத்து போர் நடைபெற்று வருவதால் பூட்டானில் இருக்கும் தனக்கு ராணுவத்தில் விடுப்பு அளிக்கவில்லை, நாட்டுக்காக போராடிவரும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்து உதவ வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பிய உள்ளார்.மேலும் இது தொடர்பாக ஆன்லைனில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.எல்லையில் பாதுகாப்பணியில் உள்ள ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவி இருவர் மீதும் இட பிரச்சனை காரணமாக ஆறு பேர் கொண்ட கும்பல் அடித்து காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0