75 – வயது மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன் கைது

கோவை ஜூலை 16
கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், புது தோட்டம் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51 )குடிப்பழக்கம் உடையவர்.இவரது மனைவி இறந்துவிட்டார் இதனால் அவர் தனது 75 வயது மாமியார் மற்றும் மகன் தீபக் ( வயசு 21) ஆகியோருடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை மருமகன் மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த மூதாட்டியை மீட்டனர் ..இதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மகன் தீபக் தனது தந்தையைசரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் மூதாட்டி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .மகன் தாக்கியதில் படு காயமடைந்த தந்தை மணிகண்டனும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்இது குறித்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை இன்று கைது செய்தனர்..