கோவை செப்டம்பர் 27கோவைபோத்தனூரில் உள்ள தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பானுமதி ( வயது 52)சிங்காநல்லூர்,உப்பிலிபாளையம் ,காமராஜர் ரோட்டில் உள்ள பாரதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவர் நேற்று காலையில் விருதுநகர்சென்று விட்டு பஸ்சில் சிங்காநல்லூர்பஸ் நிலையத்துக்கு அதிகாலை 4:30 மணிக்கு வந்தார்.அவரை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்குஅழைத்து செல்வதற்காக அவரது மகன் சஜேஸ் நாராயணன் (வயது 21) ஸ்கூட்டரில் வந்தார். சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகேகாமராஜர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அரிசிமூட்டைகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஈச்சர் வேன் அவரதுஸ்கூட்டர் மீது மோதியது. இதனால்வலது பக்கம் கீழே விழுந்த இன்ஸ்பெக்டர் பானுமதியின்உடல் மீது வேன்சக்கரம் ஏறிஇறங்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு இ.எஸ்.ஐமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இன்ஸ்பெக்டர் பானுமதி 2004 -ம்ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.இவரது சொந்த ஊர் விருதுநகர் ..இவர துகணவர் பெயர் ராதாகிருஷ்ணன்,இவர் விருதுநகரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்,கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகரில் ரயில் தண்டவாளத்தைகடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தார்.இவர்களுக்கு,சஜேஸ்நாராயணன் என்ற மகனும் தான்யா ( வயது 19) என்றமகளும் உள்ளன. ர் .இவர்கள் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்கள்..இவர்கள் படிப்பு வசதிக்காக பானுமதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பணி மாறுதல் கேட்டுகடந்த 8 மாதங்களுக்கு முன் கோவைக்கு வந்தார்..இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸ்இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த இருளப்பன் (வயது 25 )என்பவரை கைது செய்தார்..இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .வேன் மோதி பலியானபெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்பானுமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பிரேத பரிசோதனை முடிந்ததும் சிங்காநல்லூரில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.அங்கு போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், துணை கமிஷனர்கள் உதவி கமிஷர்கள்,ஆய்வாளர்கள்மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மற்றும் துணை கமிஷனர்கள் தோளில் சுமந்து வந்து வேனில் ஏற்றினார்கள்..ராமநாதபுரம்நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஈஷா மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .அங்கு போலீஸ் மரியாதை உடல் உடல் தகனம் செய்யப்பட்டது.அவரதுஉடலைப் பார்த்துமகனும், மகளும்,குடும்பத்தினரும்பெண் போலீ சாரும்,பொதுமக்களும் கதறி அழுதனர். இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருகசெய்தது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





