வாலிபருக்கு கத்திக்குத்து. 2பேர் கைது

கோவை அக்டோபர் 8 கோவை சொக்கம்புதூர், செல்வபுரம் ,ஜீவா பாதையைச் சேர்ந்தவர் காமன். இவரது மகன் பிரசாந்த் (வயது 26) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திவ்யாஸ் ( வயது 27) அகிலன் (வயது 21) ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது .இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரசாந்த் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திவ்யாஸ் ,அகிலன் ஆகியோர் பிரசாந்திடம்வாய் தகறாறு செய்தனர். பின்னர் அவரை கத்தியாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து திவ்யாஸ் ,அகிலன் ஆகியோர கைது செய்தார் .இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.