கோவை மாநகரில் ஐந்து ஆண்டுகளில் 33 ஆயிரத்து 183 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்து 11 ஆயிரத்தி 74 தெருநாய்கள் இருந்தன. அதன் இனப்பெருக்கத்தை தடுக்க மாநகராட்சி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு தகவல் கேட்டு இருந்தார்.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை ஐந்தாண்டுகளில் 33 ஆயிரத்து 183 தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது இதற்காக மாநகராட்சி பட்ஜெட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 3 கோடி 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதில் ரூபாய் 3 கோடி 63 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.





