உயர்ரக போதை பொருள் விற்பனை வழக்கில் சூடான் மாணவருக்கு சிறை தண்டனை.

கோவை மாவட்டம் சூலூர் போலீசார் கடந்த 11-11- 2021 அன்றுசூலூர் ஜி. கே எஸ். நகரில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர் அப்போது அவரிடம் உயர் ரக போதை பொருளான ” மெத்த பெட்டமின் “இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் சூடான் நாட்டைச் சேர்ந்த அல்போரா அலி முகமது (வயது 25) என்பது தெரியவந்தது .அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் சூலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்ததும், விசா காலம் முடிந்தும் அவர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 4- வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி விக்னேஷ் சூடான்நாட்டைச் சேர்ந்த மாணவர் அல்போரா அலி முகம்மதுவுக்கு 1மாத சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும்விதித்துதீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் ஆனார்.