கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா (வயது 27) இவர் தனது குடும்பத்துடன் காரில் மைசூர் சென்றார். அங்கிருந்து அவர் அதே காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அந்த காரில் 2 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். நீலாம்பூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டது .அதை தொடர்ந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே காரை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். இது குறித்துசூலூர் தீயணைப்பு படை யினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்துசூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கார் தீப்பிடித்து எறிவதற்கு முன் அதில் பயணம் செய்த 6 பெரும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர். ஓடும் காரில் தீப் பிடித்த சம்பவம் அந்த பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0