வீடு புகுந்து முதியவரிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கோவை ஜூலை 10 கோவை அருகே உள்ள பி. என். புதூர், ரங்கே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் மணியன் (வயது 80) இவர் நேற்று அவரது வீட்டின் முன் உள்ள போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு ஆசாமி வீட்டினுள் சென்று அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார் .இது குறித்து மணியன் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் ஆட்டோவில் சென்று வீடு புகுந்து முதியவரிடம் செயின் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.