வால்பாறை நல்ல காத்து நகராட்சி தொடக்கப்பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் கர்மவீரர் கு.காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து காமராஜர் பற்றிய கவிதை, பாடல்கள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது பள்ளியின் தலைமையாசிரியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழா போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களும், மாணவர்களின் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்