கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் ஆண்டி கரெப்ஸன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியமும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு மூலம் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து பணியாளர்கள் பயன்பாட்டிற்கான உபகரணங்கள், நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாரியத்தலைவரிடம்பணியாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வாரியத்துணைத் தலைவர் கனிமொழி செல்வராஜ் , நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், ஆன்டி கரெப்ஸன் கவுன்சில் தலைவர் சாம் பிரகாஷ், மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஸ்வரி, நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், நகராட்சி துப்புரவு பணியாளர் செந்தில் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0