நீலகிரி உதகை பாரம்பரியமிக்க அரசு பூங்கா சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் உடைபட்டு பல மாதங்கள் ஆகியும் சீர் செய்யாமல் உள்ளது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தாமதம் ஏன் சமூக ஆர்வலர்கள் கண்டனம்?

நீலகிரி உதகை சுற்றுலா இடங்களை கொண்ட இடமாகும் இங்கு நாள்தோறும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய உதகை பாரம்பரியமிக்க அரசு தாவரவியல் பூங்கா சாலை மற்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் உள்ளது, இந்தப் பகுதி சாலை அருகே மனித கழிவு பாதாள சாக்கடை உடைபட்டு பல மாதங்கள் ஆகியும் பொங்கி ஓடுகின்றன, இந்த சாலையில் முக்கிய அரசு அலுவலகங்கள் பயன்படக்கூடிய சாலை முக்கியமாக சுற்றுலாத் துறைக்கும் தோட்டக்கலைத் துறை ராஜ் பவன் மாளிகை, மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் விடுதி, விளையாட்டு மைதானம், போன்ற முக்கிய சாலையைக் கொண்ட இந்தப் பகுதியில் பல மாதங்களாகவே சீர் செய்யாமல் பாதாளக் கழிவுநீர் வெளியேறி செல்கிறது, இதனால பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது, சில நேரங்கள் சுற்றுலாப் பயணிகள் மூக்கை பிடித்து நடந்து செல்கின்றன, பகுதி நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுவது பல மாதங்களாகவே சீர் செய்யாமல் துர்நாற்றத்தோடு இந்த கழிவு நீர் வெளியேறி செல்கிறது, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகச்சுழிப்புடன் பகுதியை கடந்து செல்கின்றன, இதனால் சிறு குழந்தைகள் முதியோர்கள் கழிவுநீர் பகுதியில் நடந்து செல்லும் பொழுது வைரஸ் கிருமி தொற்று பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன, இதுபோன்ற பொதுமக்கள் பாதிக்கக் கூடிய பாதாள கழிவு நீர் வெளியேறுவது பல இடங்களில் குப்பைகள் கொட்டுவது உடனடி நடவடிக்கை எடுக்காததால் உதகை சுற்றுலாத் தலங்களின் சிறப்பு நாளுக்கு நாள் பாதித்து வருவதை சுற்றுலாத்துறை மற்றும் நகராட்சி நடவடிக்கையின் தாமதமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்,
இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் பகுதி கவுன்சிலர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்??