கடையநல்லூர் அருகே பல மாதங்கள் தேங்கி கிடக்கும் சாக்கடை

பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்ளதா பஞ்சாயத்து நிர்வாகம்

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கடம்பன்குளம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பகுதியில் உள்ள கீழ ஓடையில் சாக்கடை கழிவுநீரான பல மாதங்களாக தேங்கி இருப்பதாகவும். இந்த ஓடை சுத்தம் செய்ய இந்த பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்தும். இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும். இதனால் ஓடையில் உள்ள சாக்கடை கழிவுநீரானது அதிக அளவில் தேங்கி நீர்ப்பதோடு மற்றும் இல்லாமல் தூர்நாற்றம் வீசி வரும் இந்த சாக்கடை கழிவு நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் ஓர் இடமாகவும் உள்ளது.

இதே போன்று மழைக்காலங்களில் இந்த ஓடையில் அதிக அளவில் வரும் சாக்கடை கழிவுநீரானது. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளே தேங்கி நிற்பதால் வீட்டிற் குடியிருக்க முடியாத நிலை உள்ளதாகவும். இதனால் பள்ளி செல்லும் முதியவர்கள் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு விதமான நோய் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும்.

இதே போன்று இந்த ஒடையில் கட்டப்பட்ட பாலங்கள் உடைந்து பலமாதங்கள் ஆகியும் இதுவரை இதனை சரி செய்யவில்லை எனவும். இதனால் பாலத்து வழியாக பள்ளிசெல்லும் குழந்தைகள் மற்றும் நடந்து முதியவர்கள் எதிர்பாராமல் தவறி கீழே விழுந்து படுகாயம் ஏற்படுவதாகவும். தொடர்கதையாக உள்ளது எனவும்.

மேலும் இந்த பகுதியில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் வருடங்களாக எனவும். ஆனால் குறித்து இந்த பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகம், யூனியன் அலுவலகம், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைவில்லை எனவும் வேதனையுடன் கூறும் கிராமங்கள்