ஒர்க் ஷாப் முன் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ திருட்டு

கோவை ஜூலை 25 கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பக்கம் உள்ள தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50) கடந்த 14-ஆம் தேதிதனது சரக்கு ஆட்டோவை பொள்ளாச்சி உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தியிருந்தார். நேற்று இரவில் யாரோ அதை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் பொள்ளாச்சி டவுன் கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.