கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை ஜூலை 11 கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக மோப்பிரிபாளையத்தைச் சேர்ந்த சரண் ( வயது 25 )சுரேஷ் ( வயது 36 )ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது .செய்யுமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 2 பேரையும் சரவணம்பட்டி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவருக்கும் நேற்று வழங்கப்பட்டது.