ஆருத்ரா தரிசன மஹோற்சவ பெருவிழா..!

நீலகிரி மாவட்ட மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியினர் வாழும் உதகைப் பகுதியில் ஆண்டுதோறும் பழங்குடி தோடர் சமுதாயத்தை சேர்ந்த 14 மந்துகளின் குடும்பத்தினர் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பர்னல் பேலஸ் முத்தோரைப் பாலடா சாலை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பவனேஸ்வர் திருக்கோயிலில் 114 வது ஆண்டு விழா கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஜி சங்கரலிங்கம் முதலியார் குடும்பத்தினர் சார்பில் திருவிழா நடைபெற்றது, இந்தக் கோவிலின் திருவிழா 125 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது அறங்காவலர் ஜி சங்கரலிங்கம் முதலியார் குடும்பத்தினர் மற்றும் தோடர் குடும்பத்தினர் பொது மக்களின் முக்கிய பங்காக உள்ளது, விழாவின் முக்கிய நிகழ்வாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார், நீலகிரி தோடர் பழங்குடியினர் மக்களுடன் கலந்துகொண்டு பாறை முனீஸ்வரன் சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பாரம்பரிய அலங்கார தேர் வடம் பிடித்து துவங்கி வைத்தார், மற்றும் தோடர் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகளை தெரிவித்தார், எஸ் காந்தராஜ் தலைமையில், நீலகிரி மலைவாழ் தோடர் பெருமக்கள் முன்னிலையில் ஸ்ரீ பவாணீஸ்வரர ஆருத்ரா தரிசன மேஹாற்சவ திருவிழா தேர் அலங்கரிக்கப்பட்டு நீலகிரி மலைவாழ் தோடர் 14 மந்து பெருமக்கள் திருத்தேரை உதகை நகர வீதியில் எடுத்து வந்தனர், தோடர் சமுதாயத் தலைவர் மந்தேஷ் குட்டன், தொடர் சமுதாய துணைத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், சத்யராஜ் செயலாளர், பாஜக விவசாய அணிஎஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் குமரேசன், மற்றும் பழங்குடியினர் தோடர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் . ஸ்ரீபவனேஸ்வரர் ஸ்ரீ நடராஜமூர்த்தி ஸ்ரீ சிவகாம சுந்தரேஸ்வரி திருத்தேர் உதகை நகர வீதி அனைத்து பகுதிகளிலும் தோடர் பழங்குடியினர் மக்களின் ஆடல் பாடலுடன் திருத்தேர் தோடர் பழங்குடியினர் மக்கள் இழுத்து வருகின்றன, இந்த உதகை மக்களுக்கு பெருமை சேர்க்கும் முக்கிய பங்கு நடராஜரின் தரிசனம் மற்றும் தொடர் மக்களின் முழு பங்கு என்பதை அறங்காவலர் ஜி சங்கரலிங்கம் குடும்பத்தினர் எஸ் காந்தராஜ் அவர்கள் தெரிவித்தார், இந்தத் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது காலை 6 மணி துவங்கி மாலை 6:00 மணி வரை ஆடல் பாடல் உடன் தேர் பவனி எடுத்துச் செல்லப்படுகிறது ஏனென்றால் நடராஜ அரசர் ஆடல் பாடலை அதிகமாக விரும்புவதால் அவருக்கு ஆராதனையாக தோடர் பெருமக்கள் உதகை மத்திய பேருந்து நிலையம் துவங்கி லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சாலை, ப்ளூ மௌண்டைன், காப்பியோஸ் பகுதி, கமர்சியல் சாலை வழியாக, வேணுகோபால் கோவில் வரையிலும் பாரம்பரிய தோடர் இன மக்கள் சிவனின் அலங்கார தேரை சுமந்து வந்தனர், பொதுமக்கள் ஒவ்வொரு இடங்களிலும் பூஜைகள் செய்து வழிபட்டனர், நடைபெற்ற திருவிழாவில் பொதுமக்கள் தொடர் இன மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு வழிபட்டனர்,