கோவை ஆகஸ்ட் 27 கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர்ராமகிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவரது மனைவி பிரியா ( வயது 57 )இவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள வேல்முருகன் ( வயது 41) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்துவந்தார் .இந்த நிலையில் பிரியா அவருக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்ற பணம் ரூ 1 கோடியே 20 லட்சத்தை ரொக்கமாக தான் வசிக்கும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இதற்கிடையில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக உரிமையாளர் வேல்முருகனுக்கும், பிரியாவுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பிரியா தனது மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இரவில் இருந்த ரூ 1 கோடியே . 20 லட்சம்
பணம் மற்றும் வெள்ளி பொருள்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா ஆர். எஸ். புரம். காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கார்த்திகேயன் ,உதவி கமிஷனர் செல்லதுரை ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது அதில் கதவின் பூட்டு உடைக்காமல் சாவியை பயன்படுத்தி திறந்து இருந்ததால் போலீசாருக்கு வீட்டு உரிமையாளர்வேல்முருகன் மீது சந்தேகம் ஏற்பட்டது இதை உறுதி செய்ய வீட்டை சுற்றி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் .அதில் பிரியா வசித்து வந்த வீட்டு கதவை வேல்முருகன் மாற்று சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்று ரூ 1 கோடியே ரூ. 20 லட்சத்தை திருடி சென்றது உறுதி செய்யப்பட்டது .இதை தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ 1கோடியே 20 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைதான வேல்முருகன் தையல் கடை நடத்தி வந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








