மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

கோவை ஜூலை 29 கோவை சுந்தராபுரம், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் ( வயது 46) இவரது மனைவி கௌசல்யா. இவர் கடந்த 21- ஆம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கபட்டு இறந்துவிட்டார். இதிலிருந்து சுந்தர் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் .இந்த நிலையில் நேற்று வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து நேற்று வீட்டில் மனைவியின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துசுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..