மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் இன்று நடந்தது

கோவை ஜூலை 19 கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றதடுப்பு கூட்டம் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் இன்று நடந்தது.இதில் விபத்து தடுப்பு,குற்றத்தடுப்பு,போதைப் பொருள் ஒழிப்பு,24 மணி நேர ரோந்து பணி, ரவுடிகள் நடமாட்டம் கண்காணிப்பு, குறித்துஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், .ஏதாவது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளை இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது.புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற அறிவுரைகளை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார்.இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் ,உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.