கோவை ஜூலை 3 கோவை மத்திய சிறை மைதானத்தில் ரூ.167 கோடி செலவில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பூங்கா பணிகளை கடந்த 2025 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 45ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்துமாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- செம்மொழிப் பூங்கா மலர் சோலை போல அமைக்கப்பட்டு வருகிறது .இது கோவை மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த இடமாக மாறும். இங்கு 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஏற்படுத்தப்பட்ட காட்டில் பயணம் செய்வது பொது மக்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். கண்ணாடி வீடுகளும் உருவாக்கப்படுகிறது. இந்த பூங்காவுக்குள் 1000 பேர்அமரும் மாநாட்டு மையமும், ஒளிரும் விலங்கு உருவங்கள், பார்வையாளர்களுக் கான செல்பி இடங்கள் திறந்தவெளி, உடற்பயிற்சி கூடம் சுவர் ஓவியங்கள் தமிழ் வரலாற்றையும் நவீன கலாச்சாரத்துடனான தொடர்பை குறிக்கும் மற்றொரு சிறப்பு அம்சமாக தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது .இதில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 219 அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளன. கூடுதலாக 2500 பாரம்பரிய மரங்கள் ,மூலிகை தாவரங்கள் நடப்பட்டுள்ளன. உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூங்காவுக்கான தண்ணீர் வசதி செய்யப்படுகிறது. செம்மொழி பூங்கா பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. மற்ற பணிகளும் வேகப்படுத்தப்பட்டு வருகிறது .அடுத்த மாதம் ( ஆகஸ்ட் )15 -ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வளம் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து கோவை நகரின் ஒரு முதன்மை இடமாக செம்மொழி பூங்கா மாற உள்ளது. பார்வையாளருக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதே இந்த பூங்காவின் நோக்கம். இவர் அதிகாரிகள் கூறினார்கள்.
