வால்பாறை அருகே செல்லாளிப்பாறை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகர் மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள செல்லாளிப்பாறையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் கவிதா ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மாணவர்களிடம் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்குவது குறித்தும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்று கேட்டபோது நல்லமுறையில் வழங்கி வருவதாக மாணவர்கள் மகிழ்ச்சியோடு கூறியதைக் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் மணிவிளக்கிடம் பள்ளியில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அதேபோல சத்துணவு ஊழியர்களிடமும் குறைகளை கேட்டறிந்து மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கவும் மழைக்காலம் என்பதால் மாணவர்களுக்கு மதிய உணவின் போது வெந்நீர் வழங்கவும் அறிவுறுத்திய தோடு அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு தேவையான பணிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் இந்த ஆய்வின் போது பள்ளி ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்களும் உடனிருந்தனர்