நீலகிரி மாவட்ட உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி முரளி வாழ்வின் இறுதி நாள் வரை ஆயுள் தண்டனையும் 15,000 அபாரதம் விதிக்கப்பட்டன,

நீலகிரி மாவட்டம் உட்கோட்டம் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த
28.01.2020 அன்று எதிரியான முரளி (31), த.பெ. ராமன், க.எண். 3/30, தும்பிமலை, கிழ் கேத்தகிரி என்பவர்
குஞ்சப்பணையை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகி அவரை பலவந்தமாக அவரது காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற
எண் 01/2020 க/பி 366 (4), 342, 376 (A) (B), 506 (ii) IPC and 5 (1) riw 6 of POCSO Act @ 366, 506 (ii) IPC and 5 (1) r/w 6 of
POCSO Act என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு
உட்படுத்தப்பட்டது, சிறையில் அடைத்தனர்,
இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து உதகை மகிளா நீதிமன்றத்தில், குன்னூர் அனைத்து மகளிர்
காவல் நிலைய ஆய்வாளர் செல்வி விஜயலட்சுமி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார் இவ்வழக்கை அரசு
வழக்குறைஞர் P.செந்தில்குமார் வாதிட்டார், இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடித்து
குற்றவாளிக்கு வாழ்வின் இறுதிநாள் வரை ஆயுள் தண்டனையும், 15,000/- ரூபாய் அபராதமும் விதித்து 14.07.2025
அன்று உதகை மகளிர் நிதிமன்ற நீதிபதி M. செந்தில்குமார் தீர்ப்பளித்தார்,