டாஸ்மாக் கடையில் அதிகாலையில் மது விற்றவர் கைது

கோவை ஜூலை 8 கோவை சாய்பாபா காலனி என் .எஸ்.ஆர். ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1613) பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ்உதயராஜ் ஆகியோர் நேற்று காலை 7 மணிக்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் செல்வகுமார் (வயது 33) கைது செய்யப்பட்டார்.இவரிடம் இருந்து 80 மது பாட்டில்களும்,மது விற்ற பணம் ரூ 1, 200 கைப்பற்றப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.