டெய்லர் ராஜாவிடம் 5 நாள் போலீஸ் விசாரணை முடிந்தது.

கோவை ஜூலை 21 கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் 1998 ஆம் ஆண்டுநடைபெற்றது. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாககோவை குனியமுத்துரை சேர்ந்த டெய்லர் ராஜாவை போலீசார் தேடி வந்தனர் .கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக இவர் இருந்து வந்தார் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்த போது அவர் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு டெய்லர் ராஜா கைதானார்.அவரை 5 நாட்கள்போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது இதை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் டெய்லர் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் . இதன்படி தலைமறைவு காலத்தில் அவர் சதி செயலில் ஈடுபட்டாரா? வேறு யாரும் அவருக்கு ஆதரவளித்தார்களா? கோவைதொடர் குண்டு வெடிப்பு வழக்கில் என்னென்ன சதி செயல்களில் ஈடுபட்டார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 5 நாள் விசாரணை இன்று திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. இன்று மாலையில் டெய்லர் ராஜா கோவை 5-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.