வீட்டில் பூட்டை உடைத்துவெள்ளி வளையல்கள் திருட்டு

கோவை ஜூலை 9 கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை, ராமகிருஷ்ணா நகர், ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 32) இவர் கடந்த 5-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான உடுமலைக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் பீரோவில் இருந்த 2வெள்ளி வளையல்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது .இது குறித்து திலீப்குமார் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.