மெத்தனப் போக்கில் இருகூர் பேரூராட்சி!!

நமது இரூகூர் பேரூராட்சி நாராயணசாமி லே அவுட் பகுதியில் சாக்கடை கட்டுவதற்காக குழி தோண்டி 2 மாத காலமாகியும் இன்று வரை தீர்வு காண படவில்லை. இந்த சாக்கடை பணியின்போது குடிநீர் குழாய் இரண்டு மூன்று முறை உடைந்து கழிவு நீரும் குடிநீரும் சேர்ந்து வருவதால் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. அதே சமயம் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி இந்த சாக்கடை குழியில் விழுகின்றனர். இதனால் பெரிய அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது.
இனி மழை பெய்யும் காலம் தொடங்குவதால் இந்த சாக்கடை குழியில் கழிவு நீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயமும். இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசுபடுதல், நிலத்தடி நீர் மாசுபடுதல், பொது மக்களுக்கு சுவாச கோளறுகள் ஏற்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் பணிகள் சரியாக நடக்க வில்லை. எனவே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாகவும் ஒன்றிணைந்து இதற்கு சரியான முறையில் தீர்வு கிடைக்காவிட்டால் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, குப்பை வரி, சொத்து வரி எந்த வரியும் கட்டமாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளார்கள். இது போன்ற செயல்பாடுகளை தவிர்த்து பேரூராட்சி சார்பில் நல்ல முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அனைவரது கோரிக்கை..