தூக்கு போட்டு முறுக்கு வியாபாரி தற்கொலை

கோவை ஜூலை 22 கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள குப்பனூர் புதூரை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 63 )இவர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த தொழிலில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்காக கடன் வாங்கி தொழிலை செய்தார் .மீண்டும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து மனைவி உமாதேவி நெகமம் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.