கோவை கோனியம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனை

கோவை ஆகஸ்ட் 1தமிழ்நாடு முழுவதும்அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் எத்தனை சாமி சிலைகள் உள்ளன?அவைகள் முறையாக கவனிக்கப்படுகிறதா? ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?என்பது பற்றி ஆய்வு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் சிலை கடத்தல் தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவு போலீசுக்குஉத்தரவு பிறப்பித்துள்ளது.இதை யடுத்து கோவை மேற்கு மண்டல சிலை தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ,சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட தனி படையினர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) 2 மணி நேரம் ஆய்வு செய்தனர்.காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு மதியம் 12 மணி வரை நீடித்தது.இன்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் இந்த ஆய்வை பார்த்து வியப்பு அடைந்தனர்.கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் இந்த சோதனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.