கோவை ஆகஸ்ட் 11நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன். இவரை சென்னையில் கொலை செய்து காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் கல்லைகட்டி போட்டனர். விசாரணையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதை யடுத்து அவருடைய உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது .அந்த உடல் எலும்புக்கூடாக காணப்பட்டது .இந்த கொலையை செய்ததாக பாளையங்கோட்டை சேர்ந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அதன் பின்னர் தான் கொலை விவகாரம் வெளியே தெரிய வந்தது .சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை செட்டிபாளையம் காவல் நிலையஇன்ஸ்பெக்டர் பொறுப்பை கவனித்து வந்தார். இந்த கொலை வழக்கில் முருகப்பெருமாள் சரண் அடைந்தாலும் அவருக்கு இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிகிறது. இந்த கொலையை பாளையங்கோட்டை சேர்ந்த நியூட்டன் ( வயது 28) பெனிட்டோ ( வயது 29 ) ஆகியோர் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்பு இல்லாத முருகப் பெருமாள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தாமல் அவரையும் கொலை வழக்கில் சேர்த்து கைது செய்த விவ காரம் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது .இது குறித்துகோவை சரக டி.ஐ.ஜி சசி மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முருகப்பெருமாள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சரியாக விசாரணை நடத்தவில்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவரைடி .ஐ. ஜி. சசிமோகன்பணியிடை நீக்கம் ( சஸ்பென்ட்) செய்து உத்தரவு பிறப்பித்தார். கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0