கடையில் இருந்த தங்க நகை திருட்டு.பெண் மீது புகார்

கோவை ஆகஸ்ட 5 கோவை சிவானந்தபுரம், வேல்முருகன் நகரை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவிக்கு காயத்திரி (வயது 29) இவர் சின்ன வேடம்பட்டி ரோட்டில் உள்ள மணி நகரில் கேஸ் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் இதுகுறித்து காயத்ரி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது கடைக்கு வந்து சென்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்,