விடுதியில் தங்கியிருந்த பெண் திடீர் மாயம்.

கோவை மே 14 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காவல் நிலைய ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் சத்யா ( வயது 27) பட்டதாரி.இவர் சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 12ஆம் தேதி விடுதியில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாயார் ஜெயலட்சுமி காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.