நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்களை அதிகமாக கவர்ந்த இடமாகும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் 5 ஆயிரம் சுற்றுலா வாகனம்
உள்ளது இதில் 2000 வாகனம் மட்டுமே TN 43 யில் உள்ளது
மற்ற வாகனங்கள் மற்ற மாவட்ட பதிவு எண்
கொண்டவை ஆகும், மேட்டுப்பாளையம், நாடுகாணி மசினகுடி
போன்ற இடங்களில் தானியியங்கி மூலம்
பசுமை வரி
வசூலிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. TN 43
அல்லாத நீலகிரியில் இயங்கும் மற்ற மாவட்ட பதிவு எண்
கொண்ட நீலகிரி RTO)யில் பதிவு செய்யபட்ட
வாகனங்களுக்கும் 3 ரூ பசுமை வரி வசூலிக்கபடுகிறது.
அதனால் நீலகிரி வாகனகளுக்கு ( லோக்கல் பாஸ் ) வட்டார
போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்படவேண்டும் என்பது ஓட்டுனர்கள் கோரிக்கையாக உள்ளது,
அதேபோல் கர்நாடக மற்றும் கேரளா போன்றா
மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் ( தற்காலிக பர்மிட் இல்லாமல் நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறது இதனால் இங்கிருக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பெரிதளவிலும் பாதிக்கப்படுகின்றன, இதை
கண்காணிக்க நீலகிரி மாவட்டத்திக்குக் தனியாக
வட்டார போக்குவரத்து அலுவளர் நியமிக்க வேண்டும் என்பது ஓட்டுநர் சங்கத்தின் வேண்டுகோளாக உள்ளது, இன்று வரை நீலகிரி மாவட்டத்திற்கு புதிதாக போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளதால் நீலகிரி உதகையில் சுற்றுலா பயணிகளுக்கு இயங்கி வரும் சுற்றுலா வாகனங்கள் இப்போது அன்றாட பிழைப்புக்கு பல விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர், இதில் உதகையில் உள்ள ஆட்டோ ரிக்ஷாக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அனுமதிகளை மீறி பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு ஆட்டோக்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வருவதால் சுற்றுலா கார் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை அங்கு உள்ள காவல்துறையினருக்கு தெரிவித்தால் இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது ஆர்.டி.ஓ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கிறார்கள், மற்றும் வெளி மாநிலம் நீலகிரி உதகையில் பலர் சொந்த தேவைக்காக வாங்கிய கார்களை ஒயிட் போர்டு வைத்துள்ளவர்கள் மறைமுகமாகவே டூரிஸ்ட் டாக்ஸியாக பயன்படுத்தி வருகின்றன, இதனை நீலகிரி மாவட்ட போக்குவரத்து துறை முழுமையாக கண்காணிப்பதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம், கோவை பெங்களூர் போன்ற இடங்களிலிருந்து உதகைக்கு வரும் கார்கள் எந்த ஒரு பர்மீட்டும் இல்லாமல் ஓட்டுவதால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா டேக்ஸிகள் பர்மிட் வாங்கி பணம் கட்டி இயங்கிக் கொண்டிருப்பது அர்த்தமில்லாமல் போகிறது என்று நீலகிரி மாவட்ட இளைஞர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர் நல சங்கம் தெரிவித்துள்ளனர், மற்றும் இருசக்கர வாடகை பைக், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட கிலோமீட்டர் அளவுக்கு ஒட்டாமல் எல்லை தாண்டி ஓட்டுவது, மற்றும் வீட்டு உபயோக கார்கள் ரகசியமாக வாடகை கார்களாக பயன்படுகின்றன, இதனை நீலகிரி உதகை போக்குவரத்து அதிகாரிகள் முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து கேரளா கர்நாடகா மற்றும் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நீலகிரி சுற்றுலா தளங்களுக்கு வரும்பொழுது பர்மிட் உள்ளதா இல்லையா என்பதையும் கண்காணிக்க வேண்டும், இதை ஓட்டுனர் சங்கம் ஏன் தெரிவிக்கிறது என்றால் நாங்கள் கர்நாடகா கேரளா எல்லையில் செல்லும் பொழுது எங்களது பர்மீட்டை பரிசோதிக்கின்றனர் அப்பொழுது அதற்குரிய தொகையை நாங்கள் செலுத்தி செல்கிறோம், ஆனால் குண்டல்பேட் தாண்டி கக்கனல செக் போஸ்ட் பகுதி காவல்துறையினர் சுற்றுலா வாகன ஓட்டுனர் பர்மிட் உள்ளதா இல்லையா என்பதை கவனிப்பதில்லை, அவர்கள் மது அருந்தி வருபவர்களையும் மற்ற பொருட்களை எடுத்து ஆய்வு செய்கின்றனர், இதனால் முதுமலை மசனகுடி சாலை வழியாக ஊட்டி வந்து செல்கின்றனர், வரக்கூடிய சுற்றுலா கார்களுக்கு பர்மிட் உள்ளதா என்பதை கண்காணிக்க படுவதில்லை, மசினகுடி பகுதியில் ஆர் டி ஓ மற்றும் போக்குவரத்து துறை கண்காணிக்கும் பணிகளில் செயல்பாட்டில் தொடர்ந்து இருந்தால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என்று சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்,
மேட்டுப்பாளையத்திலிருந்து தான் (RTO)
ஊட்டிக்கு
வருகிறார் இதனால் (RTO) அலுவலகத்தில் வேலைகள்
மிகவும் தாமதமாக நடக்கிறது அதே போல சனி மற்றும்
ஞாயிறு( PT) கார் மற்றும் ஆட்டோ தங்கள் எல்லை
தாண்டி செல்கின்றனர் இதனை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள (RTO) இல்லை என்பது கேள்விக்குறியாகி உள்ளது,
நீலகிரிக்கு தனி (RTO) வழங்க வேண்டும் எங்கள் மனு மீது
நடவடிக்கை மேற்கொள்ள
தாழ்மையுடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நீலகிரி மாவட்ட இளைஞர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர் நல சங்க மாவட்டத் தலைவர் தீபக், செயலாளர் சுனில், துணைச் செயலாளர் விக்டர் ஆண்டனி, மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சந்தித்து மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியபோது ஆட்சியர் கூறியதாவது வரும் நாட்களில் இதுபோன்ற பிரச்சனைகளை முற்றிலும் தவிர்க்க நாடுகாணி செக்போஸ்ட் மசுனகுடி செக்போஸ்ட் பகுதியில் போக்குவரத்து துறை கண்டிப்பாக ஆட்களை அங்கு நியமிக்க வேண்டும் என்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆணிட்டு கூறினார், அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட இளைஞர் சுற்றுலா வாகன ஓட்டுநர் நல சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு வந்தனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0