மாநகராட்சி அலுவலகத்தில் திருட்டு..!

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் 86 -வது வார்டு மாநகராட்சி தெற்கு டிவிஷன் அலுவலகம் உள்ளது. கடந்த 4 – ந் தேதி இரவில் யாரோ இங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த எலக்ட்ரிக் மின் சாதனங்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து தெற்கு மண்டல உதவி ஆணையர் கவுதம் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கவுதம் ( வயது 23) என்பவரை கைது செய்தனர் . இவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்க்கப்பட்டது.