கோவை ஜூலை 16 முருக பக்தர்களால் 7-வது படை வீடு என்று போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இங்கு தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மருதமலையில் ரூ 110 கோடியில் 184 அடி உயரத்தில் ஆசியாவிலே மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து விரைவில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை உள்ளது. அதில் நடந்து செல்ல பக்தர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பழனி முருகன் கோவிலில் யானை பாதையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் போன்று மருத மலையில் ஏறும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- மருதமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் எளிதாக நடந்து சென்று சுவாமியை தரிசிக்க ரூ 10 கோடி செலவில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுகளில் ஆங்காங்கேபக்தர்கள் ஓய் வுஎடுக்க, நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0