வெள்ளியங்கிரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

கோவை மே 13 கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பூண்டியில் அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இது “தென்கைலாயம்” என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.பூண்டி வெள்ளிங்கிரி கோவில் அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறிச் சென்றால் சுயம்புலிங்கமாக கிரிமலை ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், , மே ஆகிய மாதங்களில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏழுமலை ஏறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிவராத்திரி பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்று சித்ரா பவுர்ண மியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர் .சித்ரா பௌர்ணமி விழாவை ஒட்டி நேற்று காலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் உள்ள மனோன்மணி அம்மபாள் சமேத வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர் ,பன்னீர் ,இளநீர் சந்தானம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். சித்ரா பௌர்ணமி என்பதால் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது கோவில் அடிவாரத்தில் தன்னார்வலர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோவில் அடிவாரத்தில் உள்ள அலுவலகத்தில் முன்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.