வீடு புகுந்து வக்கீலுக்கு கொலை மிரட்டல் .மனைவி மீது புகார்

கோவை ஜூலை 4 கோவை ஒண்டிப்புதூர், காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 29) வழக்கறிஞர் .இவரது மனைவி நித்யா ( வயது 24) இவர்களுக்கு 24- 1 – 20 25 அன்று திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.நித்யா பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் நித்யா அவரது கணவரிடம் தனக்கு தர வேண்டிய ரூ 50 லட்சம் மதிப்புள்ள சொத்துபாகத்தை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டாராம்.இதனால் ஏற்பட்ட தகராறில் நித்யா மனோஜ் குமாரின் வீட்டினுள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்த கண்ணாடி சாமான்களை உடைத்து சேதப்படுத்தினாராம் பிறகு மனோஜ் குமாரின் கையை கடித்துகாயப்படுத்தி ,கொலை மிரட்டல் விடுத்ததாகவும்கூறப்படுகிறது .இது குறித்துவக்கீல் மனோஜ் குமார் சிங்காநல்லூர் போலீசில்புகார் செய்தார். போலீசார் மனைவி நித்யா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.