கோவை ஜூலை 29 கோவை உக்கடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் நேற்று பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு 3 பேர் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை கூவி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அனுப்பர்பாளையம் அப்துல் அஜீஸ் ( 47) போத்தனூர், பாரதிநகர் இஸ்மாயில் ( 47 ) பாலக்காடு பிரபு ( 39 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 20கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளும், 3செல்போன், ரூ 3.300 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0