பைக்கில் சென்ற நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ 30 கொள்ளையடித்த வழக்கில் 3பேர் கைது

கோவை ஜூலை 18 கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் ஜீவன் (வயது 50) இவர் கோவை ஆர். எஸ். புரத்தில் நகை பட்டறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி ரூ.30 லட்சத்துடன் கேரளா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எட்டிமடை மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று பின்னால் இருந்து வந்த கார் அவரை வழிமறித்து நின்றது .அந்த காரில் இருந்து இறங்கியவர்கள் ஜீவனை காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். பின்னர் அவரை தாக்கி ரூ 30 லட்சத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்றனர் .இது குறித்து கே. ஜி..சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெள்ளையர்களை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் .கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கேரளாவில் முகாமிட்டு கேரள போலீசார் உதவியுடன்தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் வாளையார் சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தினர் .அந்த காருக்குள் மொத்தம் 3பேர் இருந்தனர்.அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .அதில் அவர்கள் எர்ணாகுளத்தை சேர்ந்த மணீஷ் (வயது 31) ஜோசப் (வயது 26) விஷ்ணு (வயது 32) என்பதும், நகை பட்டறைஊழியரை தாக்கி ரூ 30 லட்சத்தை கொள்ளையடித்தவழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த 3 பேரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பணம்மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவைமத்திய சிறையில்படைக்கப்பட்டனர்இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது :-கோவை நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த வழக்கில் மேலும் 5 பேர் தலை மறைவாக உள்ளனர் ..அவர்கள் தான் இந்த கொள்ளை வழக்கில் முக்கிய நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களைதீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.