மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்தனர்.கோவை ஜூலை 29கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில்அருள்மிகு. வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள்.இந்தக் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா கடந்த 22 -ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் 7 – வது நாளான நேற்று காலை 8 மணி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது .மாலை 5 மணிக்கு பொங்கல் வைப்பதற்காக கோவில் உதவி ஆணையரும்,செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி தலைமையில் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதியை அடைந்தது. பின்னர் பவானி ஆற்றில் பொங்கல் பானையில் நீர் எடுத்து விநாயகர் சன்னதியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் குண்டர் நடக்கும் இடத்தில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது . பின்னர் கற்பூர தீபம் ஏற்றி குண்டத்தில் பூவளர்க்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு நடந்தது. இதை யடுத்து காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது பல்லாயிரக்கணக்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார்கள்.பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.