ஓடும் ரெயில் மீது இன்று கல்வீச்சு.7 பேர் சிக்கினர்.

கோவை ஜூலை 8மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை 8:30 மணிக்கு மெமு ரெயில் புறப்பட்டது.இந்த ரெயில் நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கும் ,என். ஜி. ஜி. ஓ. காலனிக்கும் இடையே வந்து கொண்டிருந்தது அப்போதுதண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் திடீரென்று ரெயில் மீது சரமரியாக கல் வீசியது..இதில் ரெயில் கண்ணாடி உடைந்தது.பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல் வீச்சில் ஈடுபட்டதாக 7 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்..