ஆத்தூர்- தமிழக வெற்றிக் கழக திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் தலைமையில் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் மற்றும் கிழக்கு ஒன்றியம் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செம்பட்டி தனியார் மஹாலில். தவெக மாநில தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தவெக மத்திய மாவட்ட செயலாளர் M.L. வாசுதேவன், தலைமையில் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு, புதிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மற்றும் தவெக கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள், கர்மவீரர் காமராஜர் கொள்கை தலைவர்களுக்கு மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பாடல் இசைக்கப்பட்டு, வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சிறப்புரை நிகழ்வுகள் நடைபெற்றது. தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் M.L. வாசுதேவன் தலைமையில் ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுக்கும்,தெற்கு ஒன்றிய செயலாளர் அருண்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுக்கும் பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்து அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட நிர்வாகிகள்,சார்பு அணி, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர்,கிளை கழக நிர்வாகிகள் என 400க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மேற்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.









