கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்ற 2 முதியவர் கைது

கோவை ஆகஸ்ட் 6 கோவை ராமநாதபுரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் நேற்று புலியகுளம் சவுரிபாளையம் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக செய்ததாக புலியகுளம் சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 68) அன்னைவேளாங்கண்ணி நகரை சேர்ந்த துரைராஜ் (வயது 63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1224 லாட்டரி டிக்கெட்களும், பணம் ரூ.10 ஆயிரத்து 900 கைப்பற்றப்பட்டது.