காருடன் கஞ்சா பறிமுதல் .2 பேர் கைது

கோவை ஜூலை 25 கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி காளப்பட்டி ரோட்டில் கோவில்பாளையம் எஸ்.ஐ .மோகன்தாஸ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரைதடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும் ,கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த விசுவாசபுரம், வருமான வரி காலனி யைசேர்ந்த நேரு (வயது 20) சின்ன வேடம் பட்டி ,நேதாஜி நகர் சேர்ந்த பிளக்கி என்ற சுதர்சன் (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.