வீடு புகுந்து நகை திருடிய 2 பிளம்பர் கைது

கோவை ஜூலை 29 கோவை பீளமேடு, உடையாம்பாளையம் என்.ஜி.ஆர் .வீதியைச் சேர்ந்தவர் தீபன் ராஜ் (வயது 34) நேற்று முன் தினம் இவர் இரவு உணவை முடித்துவிட்டு முதல் தளத்தில் உள்ள படுக்கை அறைக்கு தூங்க சென்றார். அப்போது யாரோ வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் செயின், 3 பவுன் கைச்செயின், 2 பவுன் மோதிரம்ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தீபன் ராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் சாகு (வயது 19) மில்லு சேத்தி ( வயது 31) ஆகியோரை கைது செய்தார். இவர்கள் இருவரும் தீபன் ராஜ் பக்கத்து வீட்டில் பிளம்பிங் வேலை செய்து வந்தனர்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.