பெட்டிக்கடையில் குட்கா .விற்ற 2 வியாபாரி கைது

கோவை ஜூலை 22 கோவைதொண்டாமுத்தூர்பக்கம்உள்ளதென்னமநல்லூரில் சமத்துவ கூடம் அருகே உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ( குட்கா ) மறைத்து வைத்து விற்பனை செய்வதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சண்முகவேலு நேற்று மாலையில் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆலந்துறை, இக்கறை போளுவாம் பட்டியைச் சேர்ந்த ஜெபராஜ் (வயது 62) திருப்பூர் மாவட்டம் காங்கேயம் குபேந்திரன் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..இந்த புகையிலைப் பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.