கோவை வந்தார் நிர்மலா சீதாராமன்.!!

கோவையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு விமானம்மூலம் கோவை வந்தார். . விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க.வினர் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்புசார்பில் மண்டல தலைவர் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மத்திய அமைச்சரிடம் டெல்லிவெடி விபத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. கோவையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் அணி, பிரிவுகள், மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரி குறைப்புகாக கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ். ஜி .கன்வென்ஷன் அரங்கத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. விழாவுக்குமாநில தலைவர் விக்ரம ராஜா தலைமைவகிக்கிறார். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்று பேசுகிறார். மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மண்டல தலைவர் சூலூர்.டி .ஆர். சந்திரசேகரன் தொடக்க உரையாற்றுகிறார். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்.மத்திய நிதி அமைச்சருக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. முடிவில் கோவை மாவட்ட தலைவர் ஜி. இருதயராஜா நன்றி கூறுகிறார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான வியாபார பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.