வால்பாறையில் சுற்றுலா மேம்பாட்டு குழுவினருடன் மாவட்ட சுற்றுலா அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுலா அதிகாரி ஜெகதீஸ்வரி தலைமையில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் குமரன் (பொறுப்பு), வட்டாட்சியர் அருள்முருகன், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், தமிழக அரசு தொழில்துறை மேம்பாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், பொள்ளாச்சி வர்த்தக சபை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை படகு இல்லம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது பின்னர் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் பழுதடைந்துள்ள வால்பாறை பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகியவற்றை மறுசீரமைத்து நவீன வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என வால்பாறை சுற்றுலா வளர்ச்சி கூட்டு குழு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 1970களில் இயங்கிய கேபிள்கார் திட்டம் பராமரிப்பு குறைவால் நிறுத்தப்பட்ட நிலையில் அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் .இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அது வால்பாறை மக்களுக்கு மாற்றுப் போக்குவரத்து பாதையாகவும், சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய அடித்தளமாகவும் அமையும் என வால்பாறை சுற்றுலா குழுவினர் தெரிவித்தனர்.
அத்துடன் பாரம்பரிய சுற்றுலா திட்டங்களுக்கான தேசிய புலிகள் ஆணைய வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், மலைப்பகுதி இயற்கை அழகை காக்கும் வகையில் திட்டம் உருவாக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
து









