2 பைக் மீது வேன் மோதல் – வாலிபர் பரிதாப பலி..

கோவை எல். அண்ட் டி .பைபாஸ் ரோட்டில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானம் அருகே நேற்று வேகமாக வந்த ஒரு வேன் அந்த வழியாகச் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது .இதில் பைக் ஓட்டி வந்த ஒத்தக்கால் மண்டபம் ஒக்கிலிபாளையம், வெள்ளாளர் காலனி யை சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஷ்ணுப்பிரியன் ( வயது 25) மற்றொரு பைக் ஓட்டி வந்த லோகநாதபுரம் முதலியார் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் ( வயது 54) ஆகியோர் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக சிங்காநல்லூரில் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் விஷ்ணு பிரியன் இறந்தார். மற்றொருமோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விஷ்ணு பிரியனின் மனைவி லாவண்யா மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் . இது தொடர்பாக வேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.