2 வீடுகளில் தங்கநகை – வைர மோதிரம் -பணம் திருட்டு

கோவை செப்டம்பர் 2 கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,ஜனதா நகர், பெரியார் வீதியைச் சேர்ந்தவர்முரளி கிருஷ்ணன் (வயது 52) இவர் கடந்த 30- ஆம் தேதிவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார்அப்போது வீட்டின் மெயின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற பார் த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் ,வைர மோதிரம்,மற்றும் வெள்ளிப் பொருள்கள்,பணம் ரூ 7ஆயிரம்ஆகியவற்றை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து முரளி கிருஷ்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்..இதே போலதுடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி ,வேணு நகரை சேர்ந்தவர் ராமு (வயது 65 )இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டுவெளியே சென்றிருந்தார். மாலையில் திரும்பி வந்தார் அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 6ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர்..இதுகுறித்து ராமு துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.