அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம்மோதி மூதாட்டி சாவு

கோவை ஆகஸ்ட் 28 கோவை மாவட்டம்,சோமனூர்பக்கம் உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 66) இவர் சோமனூர் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு இருசக்கர வாகனம் இவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகன் கோவிந்தராஜ் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டுநிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.